காவலில் இருந்த சந்தேகநபர்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் சட்டத்தின் ஆட்சிக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன -இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

0
4

அண்மைய நாட்களில் காவல்துறையினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேகநபர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களால் சட்டத்தின் ஆட்சிக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த சங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குள் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்தபோது சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன்இ கடந்த 21 ஆம் திகதி இரண்டு சந்தேகநபர்கள் காவலில் இருந்தபோது காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர்.

இவ்வாறான சம்பவங்களால் சட்ட அமைப்புகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை சிதைவடையும் என்பதால் அவற்றைத் தடுப்பதற்கு காவல்துறை மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.