கித்துள் ஸ்ரீ கிருஸ்ணா மகா
வித்தியாலயத்தில் மருத்துவ முகாம்

0
213

‘சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம்’
‘மாறி வரும் உலகில் மீள் உய்கை மிக்க மூத்த பிரஜைகள்’ என்ற தொணிப் பொருளில் நடமாடும் மருத்துவ முகாம் சேவையொன்று
ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவின் கித்துள் ஸ்ரீ கிருஸ்ணா மகாவித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி ஈ.சிறிநாத் உட்பட கரடியனாறு வைத்தியசாலை வைத்தியர்கள்,தாதியர்கள்,கிராமசேவை உத்தியோகஸ்த்தர்கள்,மற்றும் சமூக சேவை உத்தியோகஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது சிறுவர்களுக்கான மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டதுடன் பல்,வாய் தொடர்பாக உடல் உறுப்புக்களில் ஏற்படும் நோய்களுக்கெதிரான மருத்துவ சேவை வழங்கப்பட்டது.

அத்துடன் முதியவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த மருத்துனைவ முகாம் சேவைக்கு வந்தாறுமூலை அகம் ஆதரவு கரங்கள் அமைப்பு மற்றும் மட்டக்களப்பு ரோட்டரி கழகம் என்பன அனுசரணை வழங்;கியது