கிராந்துருகோட்டை பகுதியில் வழிப்பறி- பணம், உந்துருளி என்பன அபகரிப்பு

0
196

நபரொருவர் தடுத்து வைக்கப்பட்டு அவரது பணம் மற்றும் உந்துருளி என்பன கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிராந்துருகோட்டை பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 80 ஆயிரம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் உந்துருளி மற்றும் கையடக்க தொலைபேசி என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள இராணுவ உத்தியோகத்தர் வவுனியா இராணுவ முகாமில் பணியாற்றுபவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.