கிளிநொச்சி பொதுச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் திலீபனின் நினைவு ஊர்திக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து திலீபனின் நினைவு ஊர்தி கிளிநொச்சியில் பயணத்தை மேற்கொண்டது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டுள்ள திலீபன் நினைவு ஊர்தி கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று மீண்டும் பயணத்தை ஆரம்பித்துள்ளது.