26 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கிளிநொச்சியில் கடும் மழையால் வெள்ளம்!

கிளிநொச்சியில் இன்று புதன்கிழமை மாலை பெய்த பலத்த மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் குடியிருப்புக்களுக்குள் புகுந்துள்ளது.

நேற்றும் இன்றும் பிற்பகல் வேளைகளில் இடியுடன் பலத்த மழை பதிவாகியுள்ளது. மிக குறுகிய மணித்தியாளங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

36 அடி கொள்ளவு கொண்ட இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 35 அடி 5 அங்குலமாக அதிகரித்துள்ளதால் தாழ்வுநிலப்பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட இடம் முகாமைத்துவப் பிரிவு எச்சரித்துள்ளது.

கனகாம்பிகைக்குளம் மீண்டும் வான்பாய ஆரம்பித்துள்ளது. இதேவேளை பாரதிபுரம், பொன்னகர், திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை காரணமாக வெள்ள நீர் மக்கள் குடியிருப்புக்களிற்குள் புகுந்துள்ளது.
உள்ளூர் வீதிகளில் போக்குவரத்து செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். எனினும் தொடர் மழை இல்லாமையால் வெள்ள நீர் வெகுவாக வடிந்தோடி வருகின்றது.

இடர் தொடர்பான புள்ளி விபரங்கள் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தரவுகளை திரட்டி வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles