கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்கம் நடத்தும், தமிழ் விழா மற்றும் 23 ஆவது திருக்குறள் மாநாடு இன்று நடைபெற்றது.கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்கம் நடத்தும் தமிழ் விழா, 23 ஆவது திருக்குறள் மாநாடு மற்றும் கிளிநொச்சி மாவட்ட முன்னைநாள் அரசாங்க அதிபர் கந்தையா பொன்னம்பலத்தின் நினைவாக திருவள்ளுவர் விழா, சிலப்பதிகார விழா இன்று தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
வைத்தியர் ம.ஜெயராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண முன்னாள் கல்வி மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன்,தமிழ் மணி அகளங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, பரிசில் வழங்கல் மற்றம் நன்மதிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.நிகழ்வில் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், ஓய்வு நிலை ஆரம்பகல்வி பிரதிக்கல்விப் பணிப்பாளர், பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.