வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி – தர்மபுரத்தை சேர்ந்த இரண்டரை வயதுக் குழந்தையின் தாயான 20 வயதான இந்துஜன் பானுசா என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கு கடந்த 25ஆம் திகதி இரவு வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இறப்பு தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.
இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.