கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் நேற்று இரவு புகுந்த காட்டுயானைகள்,
20 இற்கும் மேற்பட்ட, பயன் தரு தென்னை மரங்களை அழித்து நாசப்படுத்தியுள்ளன.
இதனால் தமது ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.ஆகவே குறித்த பிரதேசத்தினை பாதுகாக்கும் வகையில் யானை வேலிகளை அமைத்து தங்களுடைய பயிர்களைப் பாதுகாத்து தரவேண்டும் எனவும், தற்போது இந்த யானைகளால் ஏற்பட்ட அழிவுகளுக்கு இழப்பீடுகளைப் பெற்று தர உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.