கிளிநொச்சி – ஆனையிறவுப் பகுதியில் அமைக்கபட்ட வணிக சுற்றுலா மையமும், 27 அடி உயரமான நடராஜர் சிலையும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்படவுள்ளது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை தீர்மானத்திற்கு அமைவாக, நடராஜர் பணிக் குழுவினால் நடராஜர் சிலை ஆனையிறவுப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பிரதான வர்த்தக மையம், பாரம்பரிய உணவகம், எரிபொருள் நிலையம், நவீன குளியலறை, விளையாட்டு முற்றம், கடற்கரை உல்லாச விடுதி உணவகம், வங்கி வசதிகள் என்பவற்றுடன் கூடிய ஆனையிறவு வணிக சுற்றுலா மையத்தை நிறுவும் மூல திட்டமிடல் வரைபடத்தின் அடிப்படையில், முதலாம் கட்ட பணிகள் நிறைவு பெற்று நடராஜர் சிலை திறப்பு நிகழ்வுடன் வர்த்தக தொகுதி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.