கிளிநொச்சியில் விவசாயி ஒருவர் வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி!

0
205

கிளிநொச்சி தர்மபுரம் கிழக்கைச் சேர்ந்த விவசாயி ஒருவர், உரம் மற்றும் கிருமி நாசினி இன்றி மேற்கொண்ட நெற் செய்கை மூலம் கிடைத்த விளைச்சலில் இருந்து, வறுமை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு, நெல் வழங்கியுள்ளார்.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் கிழக்கைச் சேர்ந்த இராஜரட்ணம் இராஜேந்திரம் என்ற விவசாயி, விவசாயத்தையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு, 20 ற்கு மேற்பட்ட ஏக்கரில், நெற் செய்கை மேற்கொண்டு வருகின்றார்.
கடந்த 8 வருடங்களாக, தனக்கு கிடைக்கும் விளைச்சலின் ஒரு பகுதியை, தனது கிராமத்தில், விவசாய பயிர்ச் செய்யை மேற்கொள்ள முடியாத நிலையில், வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு, ஒரு பை நெல்லை வழங்கி வருகின்றார்.
இம்முறை, பசளை மற்றும் கிருமி நாசினி இன்மையால், தனது விளைச்சல் குறைவடைந்த நிலையிலும், தான் வழமையாக, மக்களுக்கு வழங்கும் ஒரு பகுதியை வழங்கியுள்ளார்.
அந்தவகையில், 35 குடும்பங்களை தெரிவு செய்து, ஒரு பை நெல்லை, தனது வீட்டில் வைத்து, வழங்கி வைத்துள்ளார்.