கிளிநொச்சி – இரணைமடுக் குளத்தின் கீழ் இவ்வாண்டு ஏறத்தாள 11 ஆயிரம் ஏக்கரில் நெற்செய்கையும், 1500 ஏக்கர் மேட்டுநிலச் செய்கையும் மேற்கொள்வதென இன்று கிளிநொச்சி திட்ட முகாமைத்துவ குழு அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர், மேலதிக அரச அதிபர், இரணைமடு நீர்ப்பாசன பொறியியலாளர், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள், துறை சார்ந்த திணைக்களங்களின் பதவி நிலை உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டு மாவட்ட அரச அதிபர் தலைமையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டு சிறுபோக செய்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




