கிளிநொச்சி – இரணைமடு குளத்தை அண்டிய பிரதேசங்களில், மாவீரர்கள் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தின் ஏற்பாட்டில் இன்று பனை விதைகள் நாட்டப்பட்டன.
‘பனை வளர்த்து வளம் காப்போம்’ எனும் தொனிப்பொருளில், பனை விதைகள் நாட்டு நிகழ்வு இடம்பெற்றது.
பனை விதைகள் நாட்டு நிகழ்வில் பனை தென்னை கூட்டுத்தாபனத்தின் உத்தியோகத்தர்கள், இரணைமடு நன்னீர் மீன்பிடி சங்கத்தின் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், மாவீரர்கள் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தினர் என பலர் கலந்துகொண்டு பனை மர விதைகளை நாட்டி வைத்தனர்.