கிளிநொச்சி-இரத்தினபுரத்தில் சம்பவம்!கட்டடத் தொழிலாளி சடலமாக மீட்பு!

0
84

கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் கட்டிடவேலையில் ஈடுபட்டு வந்த தொழிலாளி ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேல் மாடி கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் நேற்று வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்த குறித்த நபரை காணவில்லை என அதிகாலையில் தேடிய சக தொழிலாளி, கீழே சடலமாக காணப்பட்டார் என பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறையைச் சேர்ந்த 34 வயதான சின்னான்டி பரமேஸ்வரன் என்ற ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.