கிளிநொச்சி ஏ-9 வீதியில் விபத்து: ஒருவர் படுகாயம்

0
83

கிளிநொச்சி ஏ-09 வீதியில் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் அரச பேருந்தும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் பயணித்தவரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மதியம் ஒரு மணியளவில் யாழ்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த அரச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சம்பவித்துள்ளது. விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.