கிளிநொச்சி – சிவபுர வளாகத்தில் அமைந்துள்ள மூதாளர் அன்பு இல்லத்தில் நேற்று சர்வதேச சிறுவர் முதியோர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.‘மூதாளர்களுக்கு மதிப்பளிப்போம் சிறுவரை பாதுகாத்திடுவோம்’ என்ற கருப்பொருளில் மூதாளர் அன்பு இல்லத்தில் சிறுவர் முதியோர் தினம் கொண்டாடப்பட்டது.
நேற்று மாலை 4.30 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் அன்பேசிவம் அறக்கட்டளையின் தொண்டர்கள் கலந்துகொண்டதோடு, மூதாளர்களுக்கு சிறப்புணவுகள் மற்றும் இனிப்புகள் பரிமாறப்பட்டு மூதாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
சிவபுரவளாகத்தினை சுற்றியுள்ள சிறுவர்களும் இணைந்து விழாவை சிறப்பித்திருந்தனர்.
மூதாளர்கள் தம்மையும் சமூகத்தின் அங்கமாகக் கருதி முன்னெடுத்த குறித்த நிகழ்விற்கு அன்பேசிவம் தொண்டர்களுக்கு நன்றிகளை தெரிவித்ததோடு தமது அன்பினையும் பரிமாறிக்கொண்டனர்.