கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கணை கலவெட்டிதிடல் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்றைய தினம் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் இருவரை கைது செய்ய முற்பட்டபோது ஒருவர் தப்பிச் சென்ற நிலையில், மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 48 லீற்றர் கசிப்பு, 268 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் உபகரணம் என்பனவற்றை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.


