கிளிநொச்சி தெற்கு வலயத்திற்கு உட்பட்ட கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கென நிர்மாணிக்கப்பட்ட பிரத்தியேக வகுப்பறை இன்று திறக்கப்பட்டது.
விசேட தேவையுடைய மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை ஊக்குவிக்கும் நோக்குடன் இந்த பிரத்தியேக வகுப்பறை திறக்கப்பட்டுள்ளது.
புதிய வகுப்பறையை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் ஜெயராஜ் திறந்துவைத்தார்.
அத்துடன் விசேட தேவையுடைய மாணவர்களுகளின் கற்றல் செயற்பாடுகளுக்காக 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் தொலைக்காட்சி ஒன்றும் கதிரைகளும் அன்பளிப்புச் செய்யபப்பட்டுள்ளன.