கிளிநொச்சி மக்கள் வங்கியின் 62 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்ட இரத்த வங்கிக்கு இரத்ததானம் வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மக்கள் வங்கியின் ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் 97 பேர் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.
இந்த நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி, கிளிநொச்சி மக்கள் வங்கி கிளையின் முகாமையாளர் பிரதீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.