கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது

0
4

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில், நடைபெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், வடக்கு மாகாண ஆளுநர், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், ஜெ.ரஜீவன், ச.சிறீபவானந்தராஜா, க.இளங்குமரன், இ.அர்ச்சுனா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள பணிப்பாளர்கள், முப்படையினர், பொலிசார், அரச உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள், மாவட்டத்தில் அதிகரித்துள்ள மதுபானசாலைகள், சட்டவிரோத மணல் அகழ்வு உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டன.

இதன்போது கிளிநொச்சி – கௌதாரி முனையில் இனிமேல் மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்க கூடாது என ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

கௌதாரி முனை ஒரு முக்கியமான பிரதேசம் எனவும், அதனை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது எனவும் தெரிவித்த அவர், மணல் அகழ்விற்கு அனுமதி கொடுக்கப்பட வேண்டாம் என்பது இந்த அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தீர்மானம் என்றும், இந்த முடிவுக்கு ஏற்ப செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.