கிளிநொச்சி மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக்கூட்டம், இன்று

0
187

பாடசாலைக் காலத்தில், மாணவர்கள், அறநெறி கல்வியில் பங்குபற்றுவதற்கு ஊக்குவிக்க வேண்டும் என, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக்கூட்டம், இன்று, மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில், மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அறநெறி வகுப்புகள் நடைபெறுகின்ற போது, தனியார் கல்வி நிலைய வகுப்புக்கள், நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய அரசாங்க அதிபர், அறநெறிக் கல்வியானது, மனிதனை நன்நெறிப்படுத்துவதுடன், அதன்மூலமே, ஒரு நல்ல சமூகத்தை கட்டி எழுப்ப முடியும் என குறிப்பிட்டார். இதன் போது, சிறுவர் அபிவிருத்தி தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இதில், மாவட்ட மேலதிக அரசங்க அதிபர் மற்றும் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைபள்ளி, பூநகரி பிரதேச செயலாளர்கள் மற்றும் துறை சார்ந்த தலைவர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிராம மட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.