கிளிநொச்சி மாவட்ட செயலகம், தேசிய உற்பத்தி திறன் போட்டியில், முதலாமிடம்!

0
225

கிளிநொச்சி மாவட்ட செயலகம், இரண்டாவது தடவையாகவும், 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தி திறன் போட்டியில், முதலாம் இடத்தை பெற்றுள்ளது.
உற்பத்தி திறன் தேசிய விருது வழங்கல் விழா, அலரி மாளிகையில், பிரதமர் தலைமையில் நேற்று இடம்பெற்றது. கடந்த 2018 2019 ஆம் ஆண்டுகளிலும், தேசிய உற்பத்தி திறன் போட்டியில், கிளிநொச்சி மாவட்ட செயலகம் முதலிடத்தை பெற்றுக்கொண்டது. இதனால், தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும், இம்முறையும், தேசிய உற்பத்தி திறன் போட்டியில், முதலிடத்தை பெற்றுள்ளது.
உற்பத்தி திறன் போட்டியில் வெற்றி பெறுவதற்கு, ஆளணி முகாமை, வள முகாமைத்துவம், பொது மக்கள் சேவை வழங்கும் பொறிமுறை உள்ளிட்ட பல விடயங்கள் கவனத்திற் கொள்ளப்படுகின்றது. இந்த நிலையில், குறைந்தளவான ஆளனி மற்றும் பௌதிக வளங்களுடன், கிளிநொச்சி மாவட்டச் செயலகம், முதலிடத்தை பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.