கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச் சங்கத்தின் 30வது ஆண்டு சிறப்பு நிகழ்வும், ஓய்வு நிலை பிரதிக் கல்விப் பணிப்பாளரும் தமிழ்ச் சங்கத்தின் இயக்குனராகவும் சேவையாற்றிய தர்மரத்தினம் அவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வும் கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச் சங்க மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்வின் முன்னதாக சிறப்பு அதிதிகள் வரவேற்கப்பட்டதை அடுத்து தமிழ்த் தாய் ஒளவையார், திருவள்ளுவர் உள்ளிட்டோரின் திருவுருவப் படங்களுக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டதை அடுத்து கல்விக்காகவும் தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சிக்காகவும் சேவையாற்றிய ஓய்வு நிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் தர்மரத்தினம் அவர்களுக்கான மதிப்பளிப்பும் நடைபெற்றது.
தொடர்ந்து கிளிநொச்சி முருகானந்தர் கல்லூரி மாணவர்களின் வில்லிசை நிகழ்வும் இடம்பெற்றது.
நிகழ்வில் கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர், தமிழ்ச் சங்கத்தின் நிறுவுனர், தமிழ்ச் சங்க நிர்வாகத்தினர், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.