கிளிநொச்சி மாவட் காலபோக நெற் செய்கை, மிகவும் வேகமாக, மடிச்சிகட்டி எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில், காலபோக நெற் செய்கை, கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வயல் நிலங்களில், மானாவாரி, நீர்ப்பாசனத்தின் கீழ் அடங்கலாக, சுமார் 28 ஆயிரத்து 793 ஹெட்ரேயரில் மேற்கொள்ளப்பட்டது. வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நெல் வயல்கள், மிகவும் வேகமாக, மடிச்சிகட்டி எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. நெற் பயிர்களின் இதழ்கள் தாக்கப்பட்டு, வைக்கோல் போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த புழுக்களுக்காக, கிருமி நாசினிகளை நெற் பயிர்களுக்கு தெளித்த போதும், எந்த பயனும் கிடைக்கவில்லை என, விவசாயிகள் கவலை வெளியிட்டனர்.