கிளிநொச்சி மாவட்ட விவசாய அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று

0
146

கிளிநொச்சி மாவட்ட விவசாய அபிவிருத்திக்குழுக் கூட்டம், இன்றைய தினம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் முற்பகல் 10 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர்; தலைமையில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 2023ஆம் ஆண்டுக்கான சிறுபோகச் செய்கை மற்றும் மாவட்டத்தில் செயற்படுத்தப்பட்டுவரும் விவசாய நடவடிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டதோடு 2023ஆம் ஆண்டுக்கான அனைத்து விவசாய திட்டங்கள் மற்றும் செயற்படுத்தல் என பல்வேறு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இரணைமடு குளம் உள்ளிட்ட குளங்களின் கீழான சிறுபோக நெற்செய்கை மற்றும் ஏனைய உப உணவுப் பயிர்ச்செய்கை, வீடுத்தோட்டம், விலங்கு வளர்ப்பு முதலிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு 2023ஆம் ஆண்டு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய இந்தக் கூட்டத்தில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் நிர்வாகம் சிறிமோகனன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் காணி திருலிங்க நாதன், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர், கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் மாவட்ட உதவி ஆணையாளர், நீர்ப்பாசன திணைக்களத்தின் அதிகாரிகள், தெங்கு பயிர்ச்செய்கை சபையின் அதிகாரிகள், நெல் ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரிகள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.