கிளிநொச்சி முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்தில், சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு, இன்று நடைபெற்றது. சர்வதேச ஆசிரியர் தினமான இன்று, கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட, முருகானந்தா ஆரம்ப வித்தியாலய அதிபர் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு, இன்று காலை 10.00 மணியளவில், பாடசாலையில் இடம்பெற்றது. முதன்மை விருந்தினர், சிறப்பு விருந்தினர்கள், அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர், பாடசாலை மாணவர்களின் பான்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு, விழா மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன. பெற்றோர்கள் மற்றும் படசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், முதன்மை விருந்தினர் ஆகியோர், பொன்னாடை போர்த்தி, பரிசில்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
அத்துடன், பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்த நிகழ்வில், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.