கிளி. பளை பிரதேச செயலகத்தில், இடம்பெற்ற ஆடிக்கூழ் வழங்கும் நிகழ்வு!

0
103

ஆடிப்பிறப்பை முன்னிட்டு, கிளிநொச்சி பளை பிரதேச செயலக நலன்புரி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில், இன்று, ஆடிக்கூழ் வழங்கப்பட்டது.
பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில், பளை பிரதேச செயலாளர் இ.த.ஜெயசீலன், கூழ் வழங்கலை ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது, பிரதேச செயலகத்தில் சேவைகளை பெறச் சென்ற மக்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஆடிக்கூழை பெற்றுக்கொண்டனர்.