கிழக்கில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு மகா சிவராத்திரி அன்று விடுமுறை!

0
11

மகா சிவராத்திரியை முன்னிட்டு எதிர்வரும் 27 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த விடுமுறைக்கு பின்னராக மீண்டும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி பாடசாலை கற்றல் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்புமென கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். இதேவேளை வட மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது.