கிழக்கு மாகாணத்திற்கான புகையிரத இணைப்பை அதிகரிப்பது குறித்தும், புகையிரத சேவையை நவீனப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளன.
போக்குவரத்து மற்றும் தபால் அமைச்சர் பந்துல குணவர்தனவை சந்தித்து, கிழக்கு மாகாணத்திற்கான புகையிரத இணைப்பை அதிகரிப்பது குறித்தும், புகையிரத சேவையை நவீனப்படுத்துவது தொடர்பாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.
இதன் போது தபால் சேவையில் நியமனம் பெற்ற பெருந்தோட்ட இளைஞர்கள் அடிப்படை சம்பள விகிதத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்வதால் அப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க கவனம் செலுத்துமாறு, ஆளுநர் செந்தில் தொண்டமான் பந்துல குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
செந்தில் தொண்டமான் முன்வைத்த கோரிக்கைக்கு, முன்னுரிமையின் அடிப்படையில்தீர்வு வழங்க பந்துல குணவர்தன ஒப்புக்கொண்டார்.
Home கிழக்கு செய்திகள் கிழக்கில் புகையிரத சேவையை நவீனப்படுத்துவது தொடர்பில் ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்