நீண்ட வரட்சியால் ஏற்பட்ட அதீத வெப்பத்தாக்கதால், அசௌகரியங்களுக்குள்ளாகி வந்த கிழக்கு மாகாண மக்கள், மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும்
பரவலாகப் பெய்து வரும் மழையால், மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சிறுபோக நெற் செய்கையில் ஈடுபடுவதற்கான ஆயத்தங்களை முன்னெடுத்த விவசாயிகளும், மழையால் மகிழ்ச்சியுற்றுள்ளனர்.
ஜனவரி மாதத்திற்குப் பின் கிழக்கு மாகாணத்தில் கடுமையான வெப்பம் நிலவியது.
நீர் நிலைகள் வரண்டும், விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டும் காணப்பட்ட நிலையில், நேற்று முதல் பெய்து வரும் மழையால், நீர் நிலைகளில் மீண்டும் நீர் தேங்க ஆரம்பித்துள்ளது.