கிழக்கு மாகாணக்காரியாலய
பொறியியலாளர்கள்,ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

0
142

அரசாங்கத்தினால் முன்கொண்டுவரப்பட்ட வரிக்கொள்கைகள் சீர் திருத்தப்பட வேண்டும் எனும் கருத்தினை முன்வைத்து அனைத்து ஊளியர்களும் கையெழுத்திடும் நடவடிக்கை ஒன்றிலும் ஈடுபட்டனர்.

இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் எவரும் இந்த நாட்டின் வரிக்கொள்கைகளுக்கு எதிரானவர்கள் அல்ல இருப்பினும் கடந்த வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரி திருத்தமானது மக்களால் தாங்கிக்கொள்ளக் முடியாததொன்று, இப்பணவீக்கம் அதிகரித்துக் காணப்படும் இவ்வாறானதோர் சூழ்நிலையில் அரசானது பாராபட்சமின்றி அதிக வரிக்கொள்கைகளை முன்வைத்தை தாம் வன்மையாக கண்டிக்கின்றோமென தெரிவித்தனர்.

இதன் காரணமாக பல இளைஞர் யுவதிகள் வெளிநாட்டு சென்றுள்ளனர் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றிய பல பொறியியலாளர்கள் வெளினாடு சென்றுள்ளனர் இது போல இன்னும் பலரும் வெளிநாடுகளுக்கு செல்லாமல் இந்த நாட்டில் பணியாற்ற வேண்டுமெனில் அரசானது வரிக்கொள்கை தொடர்பில் ஓர் சாராரண முடிவினை எட்ட வேண்டும் என ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டனர்