28.4 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கிழக்கு மாகாணத்தில் பெண்கள்
சிறுவர்கள் தொடர்பாக கள விஜயம்

கிழக்கு மாகாணத்தில் பெண்கள் சிறுவர்கள் தொடர்பான வியடங்களைக் கையாளும் விதத்தை அறிந்து கொள்ளும் கள விஜயம் இடம்பெற்று வருவதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ரீ. திலீப்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட மட்ட பெண்கள் வலையமைப்பு செயற்பாட்டாளர்கள், சிறுவர் பெண் பிள்ளைகள் சார்ந்த அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பெண்கள், மாவட்ட, பிரதேச செயலக அலுவலர்கள், துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் இக்கள வியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நலிவுற்ற பெண்கள் சிறுவர்கள் தொடர்பான சமூக பொருளாதார அபிவிருத்தித் திட்டம் எனும் நிகழ்ச்சி அமுலாக்கத் திட்டத்தின் கீழ் இக்கள விஜயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் திருகோணமலை மாவட்ட அரச அதிகாரிகள் செயற்பாட்டாளர்களின் பிரசன்னத்துடன் மட்டக்களப்பு மாவட்ட செயலக, பிரதேச செயலக அரச அதிகாரிகள், பெண்கள் செயலணியினர், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் இந்த கள விஜயத்தில் பங்கு பற்றியுள்ளனர்.

குறித்த குழுவினர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஒரு பிரிவாக இயங்கும் சிறுவர் நட்பு நிலையம், மட்டக்களப்பு நகர பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கு விஜயம் செய்து அங்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் மேலதிக மாவட்ட செயலாளர் சுதர்ஷினி ஸ்ரீகாந், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன், கே.கருணாகரன், திருகோணமலை மாவட்ட பெண்கள் அபிவிருத்தி அலுவலர் சுவர்ணா தீபானி உள்ளிட்ட பல

இது பற்றி இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் திலீப்குமார்,மேலும் கருத்துத்
தெரிவித்தார்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles