கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக, வேட்புமனுத்தாக்கல் செய்த ஆசிரியர்களின் சம்பள நிலுவையை வழங்க கிழக்கு மாகாண
கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பாடசாலை விடுமுறைக்காலத்தின்போது வழங்கப்பட வேண்டிய சம்பளமே நிலுவைத் தொகையாகவுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் சுமார் ஐம்பது ஆசிரியர்கள் சம்பள நிலுவையினைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
சம்பள நிலுவை வழங்கப்படுவதை இலங்கை ஆசிரியர் சங்கம் வரவேற்றுள்ளது.