கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஏறாவூர் நகரசபைக்கு விஜயம்

0
169

ஏறாவூர் நகரசபை தவிசாளர் எம்.எஸ். நழிமின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஏறாவூர் நகரசபைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் எம்.எஸ்.நழிம், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஷ், ஏறாவூர் நகரசபை உறுப்பினர்களான எஜ்.டி.எம் ஜெமில், எஸ்.எம் ஜப்பார், எம்.ஸ் றியாழ்,
எஸ்.சுதாகராசா, எம்.எஸ்.ஏ கபூர், யு.சுலைஹா, கே சபிதா உம்மா, எ.ம்.சப்றா, ஏறாவூர் நகரசபை செயலாளர் ஹமீம், கணக்காளர் புஷ்ரா, நிருவாக உத்தியோகத்தர் நபிறா றசீன், ஏறாவூர் பொலிஸ்நிலைய பதில் பொறுப்பதிகாரி, ஆளுநரின் செயலாளர், உட்பட நகரசபை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் நகரசபை செயற்பாடுகளை அவதானித்து வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, ஏறாவூர் நகரசபைக்கு சொந்தமான புதிய சந்தை கட்டட தொகுதிகளையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்வின் போது ஏறாவூர் நகரசபை தவிசாளர் எம்.எஸ். நழிம் அவர்களினால் சபையில் ஒப்பந்த நாளாந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு சபையில் காணப்படும் வெற்றிடங்களுக்கு உள்வாங்கும் முகமாக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டதோடு வருகை தந்த ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களுக்கு தவிசாளரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.