கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஜப்பான் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

0
153

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், மியாசாகி பாராளுமன்ற உறுப்பினர் ஷிம்பே மட்ஷிதாவை சந்தித்து கிழக்கு மாகாணம்
மற்றும் மலையகத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது தொடர்பாக கலந்துரையாடினார்.
இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல், இருதரப்பு சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
ஜப்பானில் உள்ள மியாசாகி கடற்கரைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் ஊடாக, இலங்கையில் கிழக்கு மாகாணத்தின்
அறுகம்பே கடற்கரையை ஊக்குவிக்க, கடற்கரை அதிகாரிகள் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற
கோரிக்கையையும் ஆளுநர் செந்தில் தொண்டமான் முன்வைத்துள்ளார்.
அத்துடன், அறுகம்பே போன்ற இடங்களில், ஜப்பானின் மியாசாகி கடற்கரையை ஊக்குவிப்பது போல், அறுகம்பே கடற்கரையை,
உள்ளூர் அதிகாரிகள் சர்வதேச சுற்றுலா பயணிகளுக்காக ஊக்குவிப்பது குறித்தும் ஆளுநர் செந்தில் தொண்டமான் கோரிக்கை
விடுத்தார்.
இதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஷிம்பேய் மட்ஷிதா ஆளுநரிடம் தெளிவுபடுத்தியமை
குறிப்பிடத்தக்கது.