குருவிட்ட பிரசேத்தில் நபரொருவர் தாக்கப்பட்டு படுகொலை

0
128

இரத்தினபுரி குருவிட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பட்டதொட்ட பிரதேசத்தில், நபரொருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

பட்டதொட்ட, குருவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 57 வயது நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் சடலம், குப்பை தொட்டிக்குள் இருந்து மிட்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய குருவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 22 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.