மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைபோசாக்குடையவர்களின் ஊட்டச்சத்தினை மேம்படுத்துவற்காக தேனகபோஷா சத்துமா வழங்கும் நிகழ்வு மண்முனை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் பங்கு பற்றுதலுடன் கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
அதிகாரிகளினால் தேனகபோஷா சத்துமா கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் நிறை குறைந்த குழந்தைகளுக்கும் வழங்கியதுடன், போஷாக்குடைய உணவினை உட்கொள்வதின் அவசியம் பற்றியும் அதிக புரத சத்துள்ள உணவினை உட்கொள்வதன மூலம் குழந்தைகளின் முளைவளர்ச்சி அடைவதினால் சிறந்த ஆரோக்கியமான பிரஜைகளை உருவாக்கமுடியும் என வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் இதன் போது தெரிவித்தார்.
கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பினரினால் தெரிவுசெய்யப்பட்ட 523 நபர்களுக்கு போசாக்கு நிலையை மேம்படுத்துவதற்காக 6 மாதம் தேனக போஷா சத்துமா வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.