வவுனியாவில் குளவி கொட்டியதில் 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் குளவி கொட்டியதில் 9 பேர் பாதிக்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் வீதியில் பலர் பயணித்துக் கொண்டிருந்த போதே குளவிக் கொட்டுதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது.இதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 9 பேர் குளவிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.