கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர!

0
190

மின்சார சபை மற்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்களுடனான கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

இது குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தலை தனது ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு 03 வருடங்களுக்கும் 25 வீதம் சம்பளத்தை அதிகரிக்கும் வருடாந்த போனஸ் மற்றும் இதர கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து இவ்வாறு விலக அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.