கெலிப்சோ தொடருந்து சேவையினூடாக 2.1 மில்லியன் ரூபாய் வருமானம்!

0
3

நானுஓயாவிலிருந்து எல்ல வரையில் பயணிக்கும், சுற்றுலாப் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட, கெலிப்சோ தொடருந்து சேவையினூடாக 2.1 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை,சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் சென்றவர்கள் கொழும்பை வந்தடைவதற்காக நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விசேட தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் எனத் தொடருந்து பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

இதேவேளை, புனித தலதா மாளிகை யாத்திரையை முன்னிட்டு நாளை மறுதினம் முதல் கொழும்பிலிருந்து கண்டிக்குத் தினமும் 8 தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.