முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டின் முன்பாக மலர்வளையம் வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வைத்தியர் சமல் சஞ்சீவ தொடர்பாக, சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்று துரித நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்ற பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகி வருவதாக கறுவாத்தோட்டம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதன்போது, பிரதிவாதி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி, நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்து, இந்த சம்பவம் தொடர்பாக சட்ட மா அதிபரிடம் ஆலோசனை பெற வேண்டிய அவசியமில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி காட்சியைப் பார்வையிட்ட பின்னர், வழக்கைத் தொடர்வதா இல்லையா என்பது குறித்து காவல்துறை தீர்மானிக்க முடியும் எனவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
இந்த வழக்கின் அடிப்படையிலான காணொளி காட்சிகளை சட்ட மா அதிபரிடம் சமர்ப்பிக்கவும், ஆலோசனை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு நீதவான் உத்தரவிட்டார்.
இந்தநிலையில், இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது