கொட்டகலை கொரோனா தொற்றாளர்கள் அம்பாறைக்கு அனுப்பி வைப்பு!

0
230

கொட்டகலை பகுதியில் அடையாளம் காணப்பட்ட இரண்டு கொரோனா தொற்றாளர்களும் அம்பாறை சுயதனிமைபடுத்தல் நிலையத்திற்கு  அனுப்பப்பட்டுள்ளனர்

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஸ்மோல் டிரேட்டன் மற்றும் டிரேட்டன் ஆகிய பகுதிகளில் சுய தனிமைப்படுத்தப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

டிரேட்டன் தோட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவரின் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவருக்கும்,பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடைய ஸ்மோல் டிரைட்டனை சேர்ந்த ஒருவருக்குமே கொரோனை தொற்று உறுதியானது.

கொட்டகலை பகுதியில் 33 பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையின் அறிக்கை நேற்று மாலை வெளியானதையடுத்தே மேற்படி நபர்களுக்கு கொரோனா தொற்று அமையாளம் காணப்பட்டு இன்று அம்பாறை சுயதனிமைபடுத்தல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதர பரிசோதர்கள் தெரிவித்தனர் ,