இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 187 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 76 ஆயிரத்து 114 ஆக அதிகரித்துள்ளது.