கொரோனா தீவிரம்: PCR சோதனைக்குரிய உபகரணங்கள் தட்டுப்பாடு!!

0
231

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அதிதீவிரத்துடன் பரவி வருகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வதற்குரிய உபகரணங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

சோதனைக்குத் தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்ய அரசு உள்ளூர் உற்பத்தியாளர்கள் ஊடாக முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. விரைவில் அவை கொள்வனவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதத்தின் இறுதி வாரத்திலிருந்து நாடு முழுவதிலும் சோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இதனால் திட்டமிட்ட காலத்துக்கு முன்னதாகவே பரிசோதனைக்குரிய உபகரணங்கள் சிலவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.