கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 09 கர்ப்பிணிகள் மரணம்

0
233

கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை ஒன்பது கர்ப்பிணிகள் மரணமடைந்துள்ளனர் என்று, குடும்ப சுகாதார சேவையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதனைக் கருத்திற்கொண்டு கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில் நேற்று(9) ஆரம்பிக்கட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட சுமார் ஒரு இலட்சம் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் பிரதீப் டி சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரத்தின் இறுதியில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை நிறைவுசெய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 175,000 கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் வழங்கப்படும் தடுப்பூசிகளின் அளவைப் பொறுத்து, 175,000 கர்ப்பிணிகளுக்கும் எதிர்காலத்தில் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.