கொள்ளுபிட்டி தொடருந்து நிலையத்துக்கு அருகில் தொடருந்து ஒன்று தடம்புரண்டமையை அடுத்து கரையோர தொடருந்து சேவை தாமதமடைந்துள்ளது.
மஹவ பகுதியில் இருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த அலுவலக தொடருந்தே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து குறித்த பகுதியில் ஒரு மார்க்கத்தில் மாத்திரம் தொடருந்து சேவைகள் இடம்பெறுவதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த தொடருந்தை தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.