![](https://eelanadu.lk/wp-content/uploads/2022/08/IMG-20220804-WA0073.jpg)
![](https://eelanadu.lk/wp-content/uploads/2022/08/IMG-20220804-WA0072.jpg)
திருட்டு கும்பல் ஒன்று நடாத்திய கத்திக்குத்து தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு அட்டம்பலவத்தையில் சம்பவம்,
வத்தளை, ஹெந்தளை.அட்டம்பலவத்தை பகுதியில் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் கொள்ளையர்களின் கத்திக் குந்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 9.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவ ருவதாவது,அட்டம்பலவத்தை பகுதியில் அமைந்துள்ள லங்கா பிலாஸ்டிக் தொழிற்சாலையில் களஞ்சிய காப்பாளராக கடமையாற்றும் இந்த குடும்பஸ்தர் தனது மோட்டார் சைக்கி ளுக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு தொழிற் சாலை நோக்கி வந்துள்ளார். இதன்போது அட்டம்பலவத்தை பகுதியில் அவரை வழி மறித்த இரு கொள்ளையர்கள் அவரிடமி ருந்த கைத்தொலைபேசி உட்பட பொருட் களை அபகரிக்க முயன்றுள்ளனர்.
இதனை தடுப்பதற்கு குடும்பஸ்தர் முயன் றபோது கொள்ளையர்கள் இவர்மீது கத்தி க்குத்து தாக்குதலை நடத்திவிட்டு அவரது கைதொலைபேசியையும் அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த வர் இரு பிள்ளைகளின் தந்தை சசிகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அட்டம்பலவத்தை பகுதியில் கடந்த பல மாதங்களாக இத்தகைய கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.