2024 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் கொழும்பு மாவட்டத்திற்கான நில மதிப்பீட்டு குறிகாட்டி 236.8 ஆக பதிவாகியுள்ளது.மேலும் ஆண்டுக்கு 7.7 சதவீத அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.குடியிருப்புகள், வணிக நடவடிக்கைகள், தொழில்துறை ஆகியவை இந்த அதிகரிப்புக்குப் பங்களித்துள்ளன.
இவை ஆண்டுக்கு முறையே 9.9 சதவீதம், 9.4 சதவீதம் மற்றும் 3.9 சதவீதம் அதிகரிப்புகளைப் பதிவு செய்துள்ளன.இந்த மூன்று துறையும் 2024 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டை விட இறுதி அரையாண்டில் அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளன