கொழும்பின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை (04) முற்பகல் 2 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 2 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அந்தவகையில், கொழும்பு 1 தொடக்கம் 4 வரை மற்றும் கொழும்பு 7 தொடக்கம் 11 வரை ஆகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதேநேரம், கடுவலை நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகள், கொலன்னாவை நகர சபை பகுதி மற்றும் வெல்லம்பிட்டிய மற்றும் கொட்டிகாவத்தை பகுதிகளிலும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.