கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கான தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கை கொழும்பில் 8 மத்திய நிலையங்களில் இன்று (17) தொடரும் என்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதன்படி மாளிகாவத்தை பி.டி சிறிசேன மைதானம், மட்டக்குளி விஸ்ட்வைக் மைதானம், கொழும்பு 6 ரொக்ஸி கார்டன், நாரஹேன்பிட்டி முகலன் வீதி, கெத்தாராம விகாரை, கொழும்பு வார்ட் பிளேஸில் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, வெள்ளவத்தையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம், எகொட உயன ஜெயகத்புற மைதானம் ஆகிய இடங்களில் இந்த தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கை இன்று இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.