கொழும்புக்கு வரும் வாகனங்களை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை!

0
120

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்கள் அனைத்துக்கும் இன்று முதல் ஒரு நாளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் ஸ்டிக்கர் ஒன்றை ஒட்ட பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்தியவசிய சேவைகளுக்காக பயணிக்கின்ற வாகனங்கள் பல தடவைகள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்இ பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதேவேளை, முகக் கவசம் அணியாமை உட்பட, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியயமை தொடர்பாக மேலும் 1,038 பேர் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, இதுவரையில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,140 என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.